கவிதைகள்

தமிழே . . .

தாயெனும் அன்புள்ளம் பாசத்தோடு
எடுத்துரைத்த உயிர் மொழியே . . .
காலம் கடந்து உயர்ந்து நிற்கும்
செம்மொழியே ! தமிழ் மொழியே !
முத்தமிழே அதை சொல்லும் முகத்தமிழே . . .
என்னிசை கலைத் தமிழே . . .
நிஜ உலகில் நிகழ்வுகளை
இன்னிசையாய் உணர்த்தும்
இயல் இசை நாடகத் தமிழே . . .
வானுயர்ந்த வள்ளுவனின் வாய்த்தமிழே . . .
புராணங்களில் உயர் இராமாயணத்தை
உலகம் உணரச் செய்த
கம்பன் கைத்தமிழே . . .
கலை உலகில் பலர் மெச்சும் என் கவித் தமிழே . . .
கவிஞர்களை பரிணமிக்க வைத்த
நம் உயிர்த் தமிழே . . .
உயிரையும் மெய்யையும் இணைத்து
உயிர்மெய்யாய் உலவும் உணர் தமிழே . . .
உலகின் பாரம்பரியம் காக்கும் பைந்தமிழே . . .
ஜனனம் உணர்ந்து வாய் திறந்து
உலவும் கன்னித் தமிழே . . .
என் தமிழே . . . என் மெய் சிலிர்க்க செய்த செந்தமிழே . . .
தமிழினம் காக்க வந்த தன் மானத் தமிழே . . .
உன்னை எழுத்து பிறழாமல் காத்தால் நீ இனியவளே . . .
நீ வளர்க . . . நாங்கள் வாழ . . .

என்றும் அன்புடன்
கந்தவேல் கவிதைக்காக . .

உயிரே . . .
எண்ணங்களில் உன்னைக் கொண்டு
எழுத்துக்களாய் எனை பாவித்து
   உனக்கனுப்புகிறேன் என்னை
விருப்போடு என்னைப் பார் - அல்ல
வெறுப்போடு என் கடித்த்தைப் பார்
நம் விழிகள் சஙமிக்கட்டும்
பேனா வரிகள் முத்தாகட்டும்
உன்
இதழசைவும் இதய ஓசையும்
எனை தாலாட்டட்டும்
சங்கீத ஊற்றாகட்டும்
இறுதியில் - என்
உயிராகட்டும் . . .
வேண்டும் . . .
 இமயத்தின் மடியினில் - நீ இதமாக
இருளான உலகினில் - நீ ஒளியாக
அசைகின்ற உள்ளத்தில் - நீ அமைதியாக
நடைபயிலும் வாழ்வில் - நீ நனவாக
இமைகளின் மூடலில் - நீ விழியாக
கல்வி எனும் சாலையில் - நீ நூலாக
நட்பெனும் உறவினில் - நீ நளினமாக, நல் உயிராக
என்றும் எப்போதும்
என் மனதோடு - நீ வேண்டும்
  அன்பே . . .
 புவித்தாய் உனை
பூரித்துப் பார்ப்பாள்
வான் தாய் உனை
வாரி இறைத்தால்  - அன்பே நீ அங்கு மழை
காகிதம் உனக்கு
தலை வணங்கும்
கவிஞன் உனை வடித்தால் -  அன்பே நீ அங்கு கவிதை
மக்கள் உனை
புகழ்ந்து போற்றுவர்
வசந்தம் உனை
தழுவினால் - அன்பே நீ அங்கு தென்றல்
இறைவனுக்கு உனை
அணிவிப்பர்
மரங்கள் உனை
தோற்றுவித்தால் - அன்பே நீ அங்கு மலர்
நான் உனை
நேசித்தேன்
இதயம் உனை
நேசித்ததால் - அன்பே நீ அங்கு என் ஜீவன்
  இதயம் . . .
இமைகள் மூடித்திறந்த போதும்
இடிகள் உதயமான போதும் - என்
இதயம் தூங்கவில்லை
உறவுகள் உதயமான போதும்
உரிமையை தேடிய போது - என்
உள்ளம் ஏங்கவில்லை
அன்பே!
உன்னை நினைத்த போது - என்
உள்ளம் ஏங்கியது
நீ
என்னை ஏற்க மறுத்து
இடறித் தள்ளிய போது - என்
இதயம் தூங்கியது . . .
மறு பிறவி

உலகம் 
ஒரு நாள் முடிந்து விடும்

மறு நாளோ காலை
எப்பொழுதும் போல் எல்லோருக்கும் முன்னால்
எழுந்திருப்பாள் - அம்மா
அடுப்பு மூட்டுவாள்
வெந்நீர் காய்ச்சுவாள்
உணவு சமைப்பாள்
சுடச் சுட தேனீரை
வாசனையுடன் தினமும் எனக்காக
கையில் ஏந்தியபடி
மறு பிறவியில்
என்னை எழுப்ப முயற்ச்சிப்பாள்!
தொடர்வாயா . . .
அன்பே என் ஆருயிரே
கலைத்து விட்ட கூந்தலில்
கலைந்து விட்டது என் இதயம்
சுகம் கண்ட செருப்பிற்கு விடைகொடு
உன் பாதம் என் கையில் மிதக்கட்டும்
கையில் வளைந்தாடும் வளையலாய் - நான்
உன் உடல் மறைக்கும் ஆடை
இன்று முதல் நான் உன் போர்வை
புத்தகம் தழுவும் கைவிரல்
என் உயிரை தழுவட்டும்
நூலாய் மாறிய நான் உன்
காதல் நரம்பாய் உன்னுள்ளே
தொடர நீ தொடர்வாயா . . .
என்ன பயன் . . .
மீனே...
உனக்கு நீந்த தெரியாவிட்டால்
துடுப்புகள் இருந்து என்ன பயன் !
பறவையே
உனக்கு பறக்க தெரியாவிட்டால்
சிறகுகள் இருந்து என்ன பயன் !
 மனிதனே . .
உனக்கு இரக்கம் இல்லாவிட்டால்
இதயம் இருந்து என்ன பயன் !
 பெண்ணே . . .
நாணம் இல்லா விட்டால்
மானம் இருந்து என்ன பயன் !
துன்பத்தை தாங்க தெரியாத
மனிதனே
உனக்கு இன்பம் கிடைத்தும் என்ன பயன் . . .
புதைந்து விடுவேனோ . . .
நண்பா !
கூட்டலும் கழித்தலுமாய்
என் வாழ்க்கை
சந்தோசத்தை பெருக்கி
சோகத்தை வகுக்க பார்த்தேன் 
இந்த கணக்கு எனக்கு புரியவில்லை
புரிந்திருந்தால் . . .
தென்றலாய் வசந்தம் வீசிக் கொண்டிருப்பேன்
புரியாததால் . . .
புதைந்து போய் விடுவேனோ . . .
என வருத்தப் பட்டுகொண்டிருக்கிறேன் . ,
அதே முகம் . . .
வித விதமாய் கோணங்களில் 
என்னைப் பார்க்க ஆசை
அத்தனையும் நிறைவேற ஆசைப்பட்டேன்
கனவில் தான் முடியுமோ
இல்லை
நியாபகம் வந்தனர் நடிகர்கள்
முடிவெடுத்தேன்
அத்தனை வேஷங்களிலும்
வித விதமாய் புகைப்படம் எடுத்து 
வீட்டில் பதித்துவைத்தேன்
ஒவ்வொரு நாளும் எழுந்து வதேன்
வீடெங்கும் என் முகம்
அவேசப்பட்டேன்
அதிரடியாய் அனைத்தையும் விட்டெறிந்தேன்
கண்ணாடி முன் வந்து நின்றேன்
அதே முகம்
விட்டெறிய முற்பட்டேன் 
முடியாமல்
தலை கவிழ்ந்து நின்றேன்
சோகத்துடன் . . .
ரோஜா மலர்
வெட்கம் என்ன என்னவளே 
நீ
பதியம் போடப் பட்டாய்
தளிர் விடவல்லவா நேரம் எடுத்து கொண்டாய்
துளிர் விட்டதும்
மெல்ல சிரித்தாய்
வளர்ந்து விட்டாய்  உன்னில் புன் சிரிப்பு
பூத்தும் விட்டாய்
ஆனால் இன்று ஏன் வெட்கப் பட்டாயோ 
உன் பூ இதழ்கள் இழந்ததலோ 
உன்னில் மென்மை கண்டேன்
அழகும் கண்டேன் அன்பும் கண்டேன்
என்னவளே நீயல்லவோ 
பெண்மையின் பிறப்பிடமும் இருப்பிடமும்
வாழ்க உன் புகழ்
என் உயிர் ரோஜா பூவே 
உன்னுலகம் . . .
நண்பா
நீபெண்ணை நேசிப்பது நிஜம் என்றால்
அவளை உன் கண்ணை போல் நேசி
அவள் உன்னை நேசிப்பது உண்மை என்றால்
உன் இமையை போல ஓடி வருவாள்
அப்போது
விண்ணுலகம் மண்ணுலகம்
என்ன எவ்வுலகமும்
உன்னுலகம்
Make a Free Website with Yola.